About Us
Child Sexual Abuse
Services & Programs
Resources
FAQ
Downloads
Links
Contact Us
உண்மை நிகழ்வுகள்              

தாரா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது)

ஒரு ஏழு வயதுப் பெண்ணிற்கு வீட்டில் இந்தி சிறப்பு வகுப்புகள் நடந்து வந்தது. தாராவின் ஆசிரியர் திறமையானவராகவும் அன்பாக பேசிப்பழகும் தன்மைகொண்டவராகவும் இருந்தார். என்றாலும், குழந்தை பாலியல் கொடுமை பற்றிய பேச்சு ஒன்றைக் கேட்டிருந்ததால், வகுப்புகள் நடக்கும் அறையில் தானும் இருக்கவேண்டும் என்று தாராவின்  அம்மா முடிவு செய்தார். சாப்பாட்டு மேசையின் ஒரு பக்கம் தாராவும் அவளுடைய ஆசிரியரும் அமர்ந்துகொள்வார்கள். எதிர்ப்பக்கத்தில் அவள் அம்மா உட்கார்ந்துகொள்வார். ஒரு நாள் ஆசிரியர் உடல் நலக்குறைவால் விடுப்பு எடுத்திருந்தார். அவருடைய இடத்தில் அம்மா உட்கார்ந்து பாடம் சொல்லிக்  கொடுத்தார். தாரா ஒவ்வொரு முறை தவறு செய்த போதும் அம்மா தன் கால்களுக்கு நடுவே தடவிக்கொடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியபோது அவர் அதிர்ச்சியும் அச்சமும் கொண்டார். தாராவின் அம்மாவும் அருகாமையில் இருந்தபோதே ஆசிரியர் இப்படியொரு வழக்கத்தைத் தொடங்கி நடத்திக்கொண்டிருந்தார் என்பது தெரியவந்தது. மேசையிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மேசைவிரிப்பின் மறைவில் இது நடந்துவந்திருக்கிறது. எதிர்த்துக் கேள்வி கேட்காமல்  அடிபணிந்து நடக்கும் ஒரு மாணவியின் குணத்தை ஆசிரியர் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

தன் மீது அதிகாரம் செலுத்தக்கூடிய பெரியவர்களுடன் கொள்ளக்கூடிய முறையான தொடர்புகளைப் பற்றி (Interpersonal Contacts) தாராவுக்கு எடுத்துக் கூறுவதற்கு முன்னர், அவளுடைய அம்மாவின் குழப்பத்தையும் என்ன செய்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்புபோல அவர் தவித்த தவிப்பையும் தீர்க்க அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. தாராவிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்றும் எடுத்துக் கூறப்பட்டது.


 

அனிதா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது)

இந்த 13-வயதுக் குழந்தையானது, அடுத்தடுத்த கோடை விடுமுறைகளில் நெருங்கிய குடும்ப நண்பரால் திட்டமிடப்பட்ட பாலியல் கொடுமைக்கு ஆளானாள். இந்த நபர் விடுமுறையைக் கழிக்க தன் குடும்பத்தோடு அங்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அனிதா பேசும் திறனை முற்றிலும் இழந்துவிட்டாள். அந்த ஆண்டு பள்ளிக்குச் செல்ல முடியாமல் போயிற்று. குடும்பத்தினரிடம் இதைப் பற்றி அவள் எதுவும் கூறவில்லை. அவளைப் பல மருத்துவர்களிடம் காட்டியபோதும் அவளது பிரச்சினை என்ன என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. நாளடைவில் பேசும் திறனை திரும்பப் பெற்றாலும் தன் தனித் தன்மை முற்றிலும் மாறிவிட்டதாக அனிதா உணர்ந்தாள். நாங்கள் பதின்பருவத்தின் (டீன்-ஏஜ் இறுதி வருடங்களில் அவளைச் சந்தித்தோம். அவளைப் போல பலபேர் குழந்தைப் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை அவளிடம் எடுத்துக்கூறினோம். இந்த ஒரு எளிய உண்மையே, வாழ்க்கையைக் குறித்த அவளது எண்ணத்தில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தியது.  தொடர்ந்து அனிதா நல்ல முறையில் நல்வாழ்வு வாழ வழியும் வகுத்தது.


மணி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது)

குழந்தை பாலியல் கொடுமை பற்றி துளிர் நடத்திய அறிமுகக் கூட்டத்தில் பங்கு கொண்ட  மருத்துவர்  ஒருவரால் இந்தப் 13-வயது சிறுவன் துளிரிடம் அனுப்பி வைக்கப்பட்டான்.

மணியின் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு 12-வயதுச் சிறுவன் அவனுக்குப் பாலியல் கொடுமை இழைப்பதாகவும் வாய்வழி உறவு வைத்துக்கொள்ளக் கட்டாயப்படுத்துவதாகவும் மணியின் தாய் கூறினார். மணி அடிக்கடி வாயைக் கழுவுவதையும் வெளிப்படையாகச் சுய இன்பம் அடையும் செயலில் (Masturbate) ஈடுபடுவதையும் காண்பதையும் அவர் கவனித்தார். பக்கத்து வீட்டுக்கு மணி செல்வதை நிறுத்துவதைத் தவிர நிலைமையை எப்படிக் கையாள்வது என்று அவருக்குத் தெரியவில்லை. மணி மனவளர்ச்சி குன்றிய குழந்தை என்பதால் இதுபோன்ற குழந்தைகளுடன் பணிபுரியும் நிறுவனம் ஒன்றிடம் அவனுடைய திறன்களை மதிப்பீடு செய்யுமாறு துளிர் கேட்டுக்கொண்டது. அப்போது அவனுக்கு 8-வயதுக் குழந்தைக்கான அறிந்து கொள்ளும் திறன் மட்டுமே இருப்பது தெரியவந்தது. துளிரின் சமூகப் பணியாளர் மணியுடன் வாரம் ஒருமுறை ஒருமணிநேரம் என்று சுமார் ஐந்து வாரங்களைச் செலவிட்டார். சுய பாதுகாப்பு பற்றியும் அவன் உடல் அவனுக்கு மட்டுமே சொந்தம் என்பது பற்றியும் அவனிடம் அவர் எடுத்துக் கூறினார். அவனைக் குணப்படுத்தவும் அவன் மீண்டும் கொடுமைக்கு ஆளாகாமல் இருக்கவும் சுய பாதுகாப்பு பயிற்சி நூலைப் பயன்படுத்தி அவனுக்கு விளக்கம் கொடுத்தார்.

இந்த வகுப்புகள் மணிக்கு மிகவும் பிடித்திருந்தன. தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையைப் பற்றிப் பேச அவன் முதலில் தயங்கினாலும் கடைசி வகுப்பின்போது அதைப் பற்றி விரிவாகப் பேசும் அளவுக்கு மனஆறுதலையும் நெருக்கத்தையும் பெற்றிருந்தான் நடந்தவை எதுவும் அவனுடைய  குற்றமில்லை, தவறில்லை என்பதை உணர்ந்த பிறகு அந்த அனுபவங்கள் எவ்வளவு கொடுமையானவை என்று அவனே பேசுவதைக் கேட்கும்போது மிகவும் திருப்தியாக இருந்தது. எதிர்காலத்தில் இனி இப்படி நடந்தாலும் அதைத் தன்னால் கையாளமுடியும் என்று அவன் தன்னம்பிக்கையோடு கூறினான். சம்பவங்களை அலசி ஆராய்வதன் மூலம் அவனுடைய தாயின் மனக்கவலைகளுக்கும் தீர்வு அளிக்கப்பட்டது.


அஷோக் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது)

அஷோக்கிற்கு ஐந்து வயது ஆகும் போது அவனைவிடப் பெரியவளான டீன்-ஏஜ் வயதுள்ள உறவுப் பெண் ஒருத்தி அவனை அவளது தனிப்பட்ட உடல் உறுப்புகளை தொடச் செய்து தன் பாலியல் தேவைகளைத் தீர்த்துக்கொண்டாள். கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும்போது அஷோக் பிடிபட்டு விட்டால் தண்டனையாக  இந்தப் பாலியல் செயல்களைச் செய்யவேண்டும் என்பதிலிருந்து ஆயத்தப்படுத்தும் செய்முறை இந்த நிகழ்வில் பயன்படுத்தப்பட்டது அப்பட்டமாகத் தெரிகிறது.

ஐந்தே வயதான சிறுவன் 17-வயதான வளர்ந்த பெண்ணிடம் எதிர்த்துப்பேசவோ,  இதைச் செய்யமாட்டேன் என்று சொல்லவோ முடியாது என்ற உண்மையை அவள் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டிருந்தாள்.

தன்னுடைய டீன்-ஏஜ் வயதில் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளும்வரை அஷோக் இந்த அனுபவங்களால் பெரிதாக ஒன்றும் பாதிக்கப்படவில்லை. திடீரென, பழைய எண்ணங்கள் தலைதூக்கின. பயங்கரக் கனவுகளாலும், தன்னைத் தானே வருத்திக்கொள்ளும் சந்தேகத்தாலும் நாட்களை நிம்மதியாகக் கழிக்க முடியாமல் தவித்தான். நேருக்கு நேர் கலந்துபேசத் தயங்கிய அஷோக் தான் யாரென்ற உண்மையை                   அடையாளத்தை இரகசியமாக வைத்திருப்பதற்காக எங்களை ஈமெயில்கள் மற்றும் செல்போன் SMS மூலம்  தொடர்புகொள்ள ஆரம்பித்தான். நடந்து முடிந்த சம்பவத்தினால் ஏற்பட்ட மனஅழுத்தத்தைக் குறைப்பதற்காக 3-4 மாதங்கள் வரை அதற்கான பயிற்சி நூலில் இருந்த பயிற்சிகளை அவனுடன் செய்தோம். தன் கடந்த கால வேதனையையும் அதைச் சார்ந்த விஷயங்களையும் அவன் கையாளத் தேர்ச்சிபெற இது உதவியது.