About Us
Child Sexual Abuse
Services & Programs
Resources
FAQ
Downloads
Links
Contact Us
சேவைகளும் நிகழ்ச்சிகளும் | சுய பாதுகாப்புக்கல்வி          

 சுய பாதுகாப்புக் கல்வி

 பயிற்சியும் ஆலோசனையும்

 குணப்படுத்தலும் தடுத்தலும்

ஆராய்ச்சியும் ஆவணப்படுத்தலும்

 துணைக் கருவி உருவாக்குதல்

 அறிவூட்டலும் சமூக ஒருங்கிணைப்பும்

 

சுய பாதுகாப்புக்கல்வி

சுயபாதுகாப்புக் கல்வி என்னும் கருத்தானது குழந்தைகள் தங்கள் சொந்தப்  பாதுகாப்பில் பங்கெடுத்துக் கொள்ளும் வலிமையையும் ஆற்றலையும் உரிமையையும் வழங்கும் ஒரு பாடத்திட்டம் ஆகும்.

(1) வயதிற்குத் தகுந்த தகவல்களைத் தருதல்

(2) தங்கள் கருத்துக்களையும் உணர்வுகளையும் உறுதிபடச் சொல்லவும் முடிவுகளை எடுக்கவும் உரிமையை நிலைநாட்டவும் தேவையான திறன்களை வளர்த்தல்;

(3)  கற்றதைச் செயல்படுத்துவதற்குத் தேவையான சுயமதிப்பை உருவாக்குதல்  ஆகிய மூன்று அம்சங்கள் இதன் இன்றியமையாத பகுதிகள் ஆகும்.

குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை வகிக்கும் அரசு, பெற்றோர், பள்ளிகள், சமுதாயம் ஆகிய அத்தனை பிரிவுகளுக்கும் வலுவூட்டும் வண்ணம் இந்தக் கல்வி அமைந்துள்ளது. (இன்னும்...)

Top

பயிற்சியும் ஆலோசனையும்

பல்வேறு தொழில்முறை மற்றும் தொழில்முறை சாராத பிற துறைகளைச் சார்ந்தவர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்யும் வகையில் துளிரின் பயிற்சித் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், சமூகப் பணியாளர்கள், பெற்றோர், மற்றும் பல்துறையைச் சேர்ந்தவர்களும் சரியான விதத்தில் இந்தப் பிரச்சினையை உணர்ந்து நடக்கவும் அதை எதிர்கொள்ளத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளவும் இந்தத் திட்டம் உதவுகிறது.

குழந்தைத் தொழிலாளர், குழந்தைகள் உரிமை, எச்..வி / எய்ட், கல்வி நிறுவனங்கள் போன்ற பல துறைகளில் பணிபுரியும் நிறுவனங்களுக்கும் இந்தப் பயிற்சிப் பணிமனைகள் நடத்தப்படுகின்றன. பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படும் குழந்தைகளுக்கு விரைந்து தக்க உதவிகளைச் செய்யத் தேவையான திறனும் அறிவும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

குழந்தை பாலியல் கொடுமையை சரியான முறையில் எதிர்கொள்ள வேண்டுமெனில் மற்ற நிறுவனங்களுடன் தன் அறிவு, ஆதாரங்கள் , தனித்திறமை இவற்றைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று துளிர் நம்புகிறது. எனவே, இதோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைக் கையாளும் நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் நடைமுறைப்படுத்தலுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குகிறது.

Top

குணப்படுத்தலும் தடுத்தலும் :

கொடுமைக்கு ஆளான குழந்தைகளுக்குக் குணமளிக்க பல துறை வல்லுநர்களின் பங்களிப்பும் அவசியம் என்ற அடிப்படையில், சமூக, சட்ட உதவி தவிர பரிவு, பயிற்சி, ஆதரவு இவற்றோடு கூடிய முழுமையான குணமளிக்கும் மாதிரி முறை தேவை என்பதை உணர்ந்திருத்தல். (இன்னும்...)

Top

ஆராய்ச்சியும் ஆவணப்படுத்தலும் :

தகவல் வங்கியை விரிவாக்கவும் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பாலியல் கொடுமைகளை எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியச் சூழலுக்கேற்ற உத்திகளை உருவாக்கவும் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை ஆவணப்படுத்துவதையும் துளிர் மேற்கொள்ளுகிறது.

சென்னையில் குழந்தைப் பாலியல் கொடுமை நடந்து வருவதை உறுதிப்படுத்தவும்  அதன் வீச்சை அறியவும் துளிர் ஆராய்ச்சி மேற்கொண்டது. மேலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் மற்ற நிறுவனங்களின் ஆராய்ச்சிகளில் இணைந்து செயலாற்றவும் துளிர் தயாராக உள்ளது.

ஆராய்ச்சியாளர்களுக்கும் தொழில்முறைப் பணியாளர்களுக்கும் உதவும் வகையில் குழந்தை பாலியல் கொடுமை சம்பந்தப்பட்ட புத்தகம், கையேடு, ஆராய்ச்சிக் கட்டுரை மற்றும் விளம்பர மற்றும் பொதுத் தொடர்புச் சாதனங்கள் கொண்ட நூலகம் ஒன்றை துளிர் நடத்திவருகிறது.(இன்னும்...)

 

Top

ஆதார வளங்களை உருவாக்குதல் :

 குழந்தை பாலியல் கொடுமை பற்றிய கையேடுகள், சுவரொட்டிகள், பயிற்சி வழிகாட்டி நூல்கள், விளம்பர மற்றும் பொதுத் தொடர்புச் சாதனங்கள் (Multimedia) ஆகியவற்றை இந்தச் செயல்பாட்டில் சம்பந்தப்பட்ட வெவ்வேறு துறையினருக்கும் ஏற்ற வகையில் வடிவமைத்து வெளியிடுவது.(இன்னும்...)

Top

அறிவூட்டலும் சமூக ஒருங்கிணைப்பும்

சரியான தகவல்களை வழங்குவதன்மூலம் மட்டுமே மக்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்தவும் அவர்களைத் தீவிரமாகச் செயல்படவும் வைக்கமுடியும். எனவே, மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வளர்க்கவும் வேண்டும், குழந்தை பாலியல் கொடுமையின் தீமைகளைப் பற்றி அவர்கள் உணர்ந்துகொள்ளச் செய்யவேண்டும் என்பதைத் துளிர் தனது தலையாய பணியாகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய அவ்வப்போது பொதுமக்களிடையே விழிப்புணர்வு எற்படுத்தவும் அவர்கள் குழந்தை பாலியல் கொடுமைப் பற்றி உணர்ந்து கொள்ளவும் தேவையான செயல்முறைகளையும் பிரச்சாரங்களையும் நடத்தி வருகிறது. இந்தப் பிரச்சினை மக்களின் சிந்தனையை எட்டுவதற்கு அது பல்வேறு வாய்ப்புகளையும் மேடைகளையும் பயன்படுத்திக்கொள்கிறது. இதற்காகத் தனி நபர்கள், குழுக்கள் மற்றும்  நிறுவனங்களுடன் கைகோர்த்துச் செயலாற்றுகிறது. சட்ட  நடைமுறைப்படுத்தல், நீதி, சுகாதாரம், கல்வி போன்ற பல்வேறு தொழில்முறைத் துறைகளைச் சார்ந்தவர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறது.

குழந்தை பாலியல் கொடுமை குறித்துச் சமுதாயத்தில் அனைவரும் நன்றாக அறிந்து கொள்வதற்கும் அதன் தீவிரத்தை உணர்ந்து செயலாற்றுவதற்கும் ஊடகங்களுடன் இணைந்து இந்தப் பிரச்சினை பற்றி நிறைய செய்திகள் பொதுமக்களைச் சென்றடைய துளிர் பணியாற்றுகிறது. இது ஒரு தொடர்ந்துவரும் முயற்சி.

துளிரின் காலாண்டுச் செய்தி மடலான Awaaz சமூகத்திற்கு அறிவூட்டவும் அதை ஒருங்கிணைக்கவும் மற்றொரு முக்கியச் சாதனமாகப் பயன்படுகிறது. (இன்னும்...)

 

Top