About Us
Child Sexual Abuse
Services & Programs
Resources
FAQ
Downloads
Links
Contact Us
       துளிர் - CPHCSA        |       எங்கள் குறிக்கோள்       |      துளிரின் நோக்கங்கள்         

குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளைத் தடுக்கவும் அதிலிருந்து                         அவர்கள் குணம் பெற்று மீளவும் உதவி செய்வதற்குப் பரிவு, நம்பிக்கை, நடைமுறைப்படுத்தவல்ல செயல்பாடு ஆகிய மூன்றும் சமஅளவில் தேவைப்படுகின்றன. நம் குழந்தைகளின் மேல் நாம் ஆழமான பரிவு கொண்டிருக்கவேண்டும், மேலும் மனிதர்களிடம் மாறிக்கொள்வதற்கான திறமை ஏராளமாக இருக்கிறது என்ற  நன்னம்பிக்கையும் நமக்கு வேண்டும் இறுதியாக குழந்தைகளுடனும் சுற்றியுள்ள சமூகத்திலும் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் வகையில் நடைமுறைக்கு ஏற்பச் செயலாற்றுவது எப்படி என்றும்  நாம் அறிந்திருக்கவேண்டும்.

இவற்றில் பரிவும் நம்பிக்கையும் ஏற்கெனவே பெரும்பாலான மனிதர்களிடத்தில் இருக்கிறது என்று துளிர் நம்புகிறது. எனவே, அது நடைமுறைக்கேற்பச் செயல்படுவதில் தனது கவனத்தைச் செலுத்துகிறது அதாவது தடுத்தல் குணப்படுத்துதல் பற்றிய கருத்து சார்ந்த எண்ணங்களிலிருந்து  தேவையான செயல்முறை நடவடிக்கைகளை எவ்வாறு உருவாக்குவது என்பதில் துளிர் கவனம் செலுத்துகிறது.

குழந்தைப் பாலியல் கொடுமைகளைப் பொறுத்த வரை அவற்றை நிகழம் மூன் தவிர்த்தல்  என்பது பொருளாதார ரீதியாகவும் அறிவு

பூர்வமாகவும்  அதிக பலனைத் தரக் கூடிய யுக்தி என்ற கருத்து பலராலும் இன்று அதிகமாக       அங்கீகரிக்கப்பட்டுவருகிறது. முக்கியமாக, சுய பாதுகாப்புக் கல்வி அளிப்பதன் மூலம் இதைத் தவிர்ப்பதால்  ஒவ்வொரு குழந்தையும் எல்லா சமயங்களிலும் பாதுகாப்பாக  உணருவதற்கான உரிமையை அதற்கு உருவாக்க.

குழந்தைகளின் தற்காப்புத் திறன்களும் பெரியவர்களின் கண்காணிப்பும் மட்டுமே எந்தக் குழந்தையும் இக்கொடுமைக்கு ஆளாகாதவாறு செய்ய முடியாது எனினும் தக்க தருணத்தில் எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் தான் நல்ல பலனைத் தரும் என்பது துளிரின் ஆணித்தரமான நம்பிக்கை ஆகும்.

நாம் ஒவ்வொருவரும் நமக்கு நேரும் துன்பம் மற்றும் கொடுமைகளில் இருந்து மீண்டும் வரும் ஆற்றலைப் பெற்றிருக்கிறோம். அதோடு ,ஒவ்வொரு குழந்தைக்கும் இயற்கையானது துன்பங்களிலிருந்து மீண்டு  வரும் தனிப்பட்ட ஆற்றல்களை வழங்கியிருக்கிறது. இந்த  இரண்டு  உண்மைகளின் அடிப்படைத் தத்துவத்தைக் கொண்டுதான் துளிர் பாலியல் கொடுமைக்கு ஆளான குழந்தைகள் மீண்டும் குணம் பெற்று வரத் தேவையான வழியில் செயலாற்றுகிறது. மேலும் குழந்தைகளின் வாழ்க்கையில் குடும்பத்திற்கும் சமூகத்திற்குமுள்ள பங்கைத் துளிர் கருத்தில் இருத்தி, கொடுமையினால் ஏற்பட்ட துயரத்தை வென்று இயல்பான நிலையை அடைவதற்கான மனத்திடத்தைக் குழந்தைகளுக்கு வழங்குவதற்கான ஒரு முழுமையான திட்டத்தை வகுக்கிறது.

 


Top